உசிலம்பட்டி அருகே மலைவாழ் மக்கள் கிராமத்தில் மர்ம காய்ச்சல் பரவல்

உசிலம்பட்டி அருகே மலைவாழ் மக்கள் கிராமத்தில் 15 குழந்தைகளுக்கு மர்ம காய்ச்சல் பாதிக்கப்பட்டுள்ளது.;

Update: 2024-02-08 16:10 GMT

அரசு மருத்துவமனை

 மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே டி.கிருஷ்ணாபுரத்தை அடுத்துள்ள மொக்கத்தான்பாறை கிராமத்தில் சுமார் 100க்கும் அதிகமான மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர்., இந்த கிராமத்தில் வசிக்கும் முத்தையா என்பவரது 3 வயது மகனுக்கு கடந்த 10 நாட்களுக்கு முன்பு மர்ம காய்ச்சல் ஏற்பட்டு,

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாக கூறப்படுகிறது., இந்நிலையில் இந்த ஒரே வாரத்தில் அடுத்தடுத்து சுமார் 14 பச்சிளம் குழந்தைகளுக்கு மர்ம காய்ச்சல் பரவி வருவதை கண்டு கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

Advertisement

இதில் உசிலம்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் 8 பேரும், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் 2 குழந்தைகளும் கடந்த ஓரிரு நாட்களில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் சூழலில்., இன்று ஒரே நாளில் 4 பச்சிளம் குழந்தைகள் உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டு அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.,

கடந்த ஒரு வாரமாக ஒரு இறப்பு நிகழ்ந்த பின்னும் மருத்துவ அலுவலர்கள் இக் கிராமத்தை ஆய்வு செய்து முகாம்கள் நடத்தவில்லை என்றும், விரைவில் சிறப்பு முகாம்களை அமைத்து மலைவாழ் மக்களை பாதுகாக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.,

Tags:    

Similar News