விவசாயிகளின் ஆடுகளை திருடிக் செல்லும் மர்மநபர்கள்!
கறம்பக்குடி, ஆலங்குடி, கீரமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் இரவு நேரங்களில் மர்மநபர்கள் விவசாயிகளின் ஆடுகளை திருடிச் செல்வது தொடர்ந்து வருகிறது.;
By : King 24x7 Angel
Update: 2024-07-13 11:57 GMT
கைது
கறம்பக்குடி, ஆலங்குடி, கீரமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் இரவு நேரங்களில் மர்மநபர்கள் விவசாயிகளின் ஆடுகளை திருடிச் செல்வது தொடர்ந்து வருகிறது. இந்நிலையில், வலங்கொண்டான்விடுதி ஊராட்சி மோளுடையான்பட்டியில் வியாழக்கிழமை இரவு 3 பேர் ஆடுகளை திருடிக்கொண்டு அங்கிருந்து தப்பியோட முயன்றபோது, அப்பகுதி இளைஞர்கள் மூவரையும் பிடித்து போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனராம்.
அங்கு சென்ற மழையூர் போலீஸார் மேற்கொண்ட விசாரணையில், அவர்கள் ஆயிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுவன் மற்றும் எஸ். வேலுமணி (24), செ. சிவா (20) ஆகியோர் என்பதும், அவர்கள் அப்பகுதியில் தொடர்ந்து ஆடுகளை திருடியதும் தெரியவந்தது. தொடர்ந்து மூவரையும் மழையூர் போலீஸார் கைது செய்து விசாரிக்கின்றனர்.