சல்லாபத்தால் வந்த வினை- பணம் பறித்து தப்பி சென்ற மர்ம நபர்கள்

கோயம்புத்தூர் மாவட்டம், நிக்கரை நந்தி கோவில் அருகே பெண் வேடமிட்டு லாரி டிரைவர்களை ஏமாற்றி பணம் பறித்த கும்பலை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

Update: 2024-05-24 16:55 GMT

காவல் நிலையம் 

மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் பிரபு.தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த மற்றொரு ஓட்டுநர் தங்கம்.மேற்கண்ட இரண்டு லாரி ஓட்டுநர்களும் கேரளாவில் இருந்து கோவை நோக்கி லாரியை ஓட்டி வந்தபோது கே.ஜி.சாவடி காவல் நிலையத்திற்கு உட்பட்ட நவக்கரை நந்தி கோயில் அருகில் பெண் வேடமிட்ட ஆண் ஒருவர் டார்ச் லைட் அடித்து லாரியை நிறுத்தி உள்ளார்.

இதனை கண்டு கீழே இறங்கி வந்த ஓட்டுநர்களிடம் தங்களிடம் அழகான பெண் இருப்பதாகவும் உங்களை அழைத்துச் செல்கிறேன் உல்லாசமாக நீங்கள் இருக்கலாம் என ஆசை வார்த்தை கூறியுள்ளார்.இதனை அடுத்து இருவரும் லாரியை சாலையின் ஓரமாக நிறுத்திவிட்டு சர்வீஸ் சாலை பகுதிக்கு சென்றுள்ளனர்.

அப்போது அங்கு மறைந்திருந்த நான்கு நபர்கள் பிரபு மற்றும் தங்கத்தை கத்தியை காட்டுமிரட்டி பணத்தை பறிக்க முயற்சி செய்துள்ளனர்.ஓட்டுநர் பிரபு தன் வைத்திருந்த 30 ஆயிரம் ரூபாயை கொடுத்த நிலையில் மற்றொரு ஓட்டுனரான தங்கம் பணத்தை தர மறுக்கவே அந்த இளைஞர்கள் அவரை கடுமையாக தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பித்துச் சென்றுள்ளனர்.

இது தொடர்பாக கே.ஜி.சாவடி காவல் நிலையத்திற்கு கிடைக்கபெற்ற தகவலின் அடிப்படையில் ரோந்து பணியில் இருந்த சிறப்பு காவல் ஆய்வாளர் முருகவேல் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டு வழக்குப்பதிவு செய்துள்ளார்.

Tags:    

Similar News