நாகை மாவட்டம் இலுப்பூர் திரவுதியம்மன் கோயில் அரவான் கலப்பலி
நாகை மாவட்டம் இலுப்பூர் திரவுதியம்மன் கோயில் அரவான் கலப்பலி நிகழ்ச்சி நேற்று இரவு நடைபெற்றது.
இலுப்பூர் திரவுதியம்மன் கோயில் அரவான் கலப்பலி நாகை மாவட்டம் கீழ்வேளூரை அடுத்த இலுப்பூர் திரவுதியம்மன் கோயில் திமிதி திருவிழா கடந்தமே 27 ம்தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. அதைத் தொடர்ந்து தினமும் மகாபாரத கதை நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. மகாபாரத கதையில் அரவான்கலப்பலி நிகழ்ச்சி நேற்று இரவு நடைபெற்றது. அரவான்கலப்பலியை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று அரவான்கலப்பலி நிகழ்ச்சி நடைபெற்றது.
அப்போது கோயில் முன் அமைக்கப்பட்டிருந்த அரவானை பலி கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அரவானை பலிகொடுக்கப்பட்டது அரவான் பலி நிகழ்ச்சியின் போது சேவல் ரத்சோற்றை குழந்தை பாக்கியம் இல்லாதவர்களும், நோயினால் பாதிக்கப்பட்டவர்களும் வாங்கிசாப்பிட்டனர். அரவானுக்கு மாலையாக அணிவிக்கப்ப்டட வடை மாலையை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கிராமவாசிகள், இளைஞர் நற்பணி மன்றத்தினர் செய்திருந்தனர்.