நாகை காடம்பாடி செபஸ்தியார் ஆலய தேர் பவனி

நாகை காடம்பாடி செபஸ்தியார் ஆலய தேர் பவனியின் போது வழி நெடுகிலும் பொதுமக்கள் திரண்டு மலர் தூவி வரவேற்றனர்.

Update: 2024-01-21 09:06 GMT

தேர் பவனி 

 செபஸ்தியார் ஆலய திருவிழா நாகை காடம்பாடியில் புனித செபஸ்தியார் ஆலயம் உள்ளது. இந்த ஆலய திருவிழா ஆண்டு தோறும் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 11-ந் தேதி மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் ஜெபமாலை, நவநாள் ஜெபம், திருப்பலி உள்ளிட்ட வழிபாடுகள் நடைபெற்று வந்தது. தேர்பவனி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேர் பவனி நேற்று முன்தினம் நடைபெற்றது.

முன்னதாக சிறப்பு அலங்காரத்தில் செபஸ்தியார் தேரில் எழுந்தருளினார். இதைத் தொடர்ந்து சிறப்பு திருப்பலியுடன், தேர் புனிதம் செய்யப்பட்டது. இதையடுத்து 8.30 மணியளவில் தேர் ஆலயத்தில் இருந்து புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் ஆலயத்தை வந்தடைந்தது. வழி நெடுகிலும் வீட்டு வாசலில் நின்றபடி பொதுமக்கள் மலர் தூவி தேரை வரவேற்றனர். இதில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர். ...

Tags:    

Similar News