நாகை ஆட்சியர் வெளியிட்ட முக்கிய தகவல்

முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்தம் சார்ந்தோர்களுக்கான  சிறப்பு குறைதீர் கூட்டம் மாவட்ட ஜூலை 12ஆம் தேதி நடைபெறும் என ஆட்சித்தலைவர் ஜானிடாம் வர்சீஸ் தகவல் தெரிவித்துள்ளார்.

Update: 2024-06-25 13:58 GMT

ஆட்சியர் டாம் வர்கீஸ்

முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்தம் சார்ந்தோர்களுக்கான                சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் தலைமையில் 12.07.2024 (வெள்ளிக் கிழமை) அன்று காலை  11.00 மணிக்கு நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியரக சிறு மாநாட்டு கூட்டரங்கில் நடைபெறவுள்ளது.

அக்கூட்டத்தில் நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சார்ந்த முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்தம் சார்ந்தோர்கள் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கைகளை மனுவாக அளித்து பயனடையுமாறு நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜானி டாம் வர்கீஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.

Tags:    

Similar News