நாகூரில் ரூ.10 லட்சம் மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல்

நாகை மாவட்டம் நாகூரில் போலீசார் நடத்திய அதிரடி ஆய்வில் 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான 300 கிலோ போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2023-11-21 10:03 GMT

நாகையில் போதைப் பொருட்கள் பறிமுதல்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
நாகை மாவட்டத்தில் போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதை தடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்சிங் தலைமையில் தேடுதல் வேட்டையில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி, நாகை அடுத்த தெத்தி கிராமத்தை சேர்ந்த சித்திக் என்பவரது வீட்டில் ஹான்ஸ் குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக நாகூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனை தொடர்ந்து நாகூர் காவல் நிலைய ஆய்வாளர் சதிஷ் தலைமையில் முதல் நிலை காவலர் மதியழகன், முதல் நிலை காவலர் காமேஷ் ஆகியோர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது சித்திக் என்பவரது வீட்டில் ஹான்ஸ், குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் இருப்பதை கண்டறிந்தனர். தொடர்ச்சி அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்த சுமார் 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான 300 கிலோ போதை பொருட்களை கைப்பற்றினர். துரிதமாக செயல்பட்டு குற்றவாளிகளை பிடித்த நாகூர் காவல் நிலைய ஆய்வாளர் சதிஷ் உள்ளிட்ட காவலர்களை நாகை எஸ்பி ஹர்ஷிங் மற்றும் டிஎஸ்பி பாலகிருஷ்ணன் ஆகியோர் வெகுவாக பாராட்டினர்.
Tags:    

Similar News