போலீசாரின் வேட்டையில் சிக்கிய மதுக்கடத்தல் கும்பல்

நாகப்பட்டினம் மாவட்ட காவல்துறையினர் நடத்திய கள்ளச்சாராய ஒழிப்பு வேட்டையில் வெளிமாநில மது கடத்தல் குற்றத்தில் ஈடுபட்ட 4 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து 300 பாண்டிச்சேரி மாநில மது பாட்டில்கள், 55 லிட்டர் சாராயம் மற்றும் ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2024-03-06 12:31 GMT

கைது செய்யப்பட்ட பெண்கள் 

 நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங் உத்தரவின் பேரில் கள்ளச்சாராய விற்பனை மற்றும் கடத்தல் ஆகியவற்றினை கட்டுப்படுத்த எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக காவல் துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் நாகூர் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட வாஞ்சூர் அருகில் சட்டத்திற்கு புறம்பாக வெளிமாநில மது பாட்டில்கள் கடத்தல் குற்றத்தில் ஈடுபட்ட நாகை மாவட்டம் மருந்து கொத்தால தெருவை சேர்ந்த சுப்பிரமணியன் மனைவி முத்துலெட்சுமி (40), மாணிக்கவேல் மனைவி அதிஸ்டகுமாரி (49) அறிவு ராஜன் மனைவி தீபா (34) மற்றும் நாகை காடம்பாடி நாகராஜன் மகன்மணிகண்டன் (40) ஆகிய நான்கு நபர்களை கைது செய்து, அவரிடமிருந்து 90 ML அளவுள்ள 300 பாண்டி மது பாட்டில்கள், 55 லிட்டர் பாண்டி சாராயம் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 1 ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டது.
Tags:    

Similar News