பழனிக்கு பாதயாத்திரையாக சென்ற நகரத்தார்

காரைக்குடியிலிருந்து பழனிக்கு பாதயாத்திரையாக சென்ற நகரத்தாரை பொதுமக்கள் உற்சாகமாக வழியனுப்பி வைத்தனர்.

Update: 2024-01-19 14:06 GMT

காரைக்குடியிலிருந்து பழனிக்கு பாதயாத்திரையாக சென்ற நகரத்தாரை பொதுமக்கள் உற்சாகமாக வழியனுப்பி வைத்தனர்.  

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியை மையமாக வைத்து 96 ஊர்களில் வசிக்கும் நகரத்தார்கள் என அழைக்கப்படும் நாட்டுக்கோட்டை செட்டியார் வகுப்பை சேர்ந்தவர்கள் பழனி முருகனை தரிசிப்பதில் முன்னோடியாகவும் 400 ஆண்டுகளை கடந்து காவடியை கால்நடையாக சுமந்து சென்று மீண்டும் கால்நடையாகவே திரும்பும் வழக்கம் கொண்டவர்கள்.

இவர்கள் தேவகோட்டை, காரைக்குடி, கண்டனூர், புதுவயல், சிறுவயல் உள்ளிட்ட ஊர்களில் இருந்து குன்றக்குடிக்கு வந்து சேரும் காவடிகள் அங்கிருந்து ஒன்றாக புறப்பட்டு, பழனிக்கு செல்வர். அந்த வகையில் இந்த ஆண்டு 330 காவடிகள் குன்றக்குடியில் இருந்து தைப்பூச விழாவுக்கு இன்று பழனி புறப்பட்டு சென்றன. பாரம்பரிய வாத்தியங்கள், ரத்தின வேல் , மாட்டு வண்டிகள் என 400 ஆண்டுகளை கடந்த பாரம்பரிய நகரத்தார் காவடிகளை ஏராளமான பக்தர்கள் வழியனுப்பி வைத்தனர்

Tags:    

Similar News