நாகர்கோவில் இரட்டை ரயில் பாதை ஆய்வு

நாகர்கோவில் இரட்டை ரயில் பாதை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

Update: 2024-03-26 17:15 GMT
குமரி - ஆரல்வாய்மொழி ரயில் பாதை ஆய்வு
கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி வரையிலான இரட்டை ரயில் பாதை பணிகள் முடிவடைந்ததை தொடர்ந்து அடுத்தக்கட்டமாக ஆரல்வாய்மொழி முதல் நாகர்கோவில் வரையிவான இரட்டை ரயில் பாதை பணிகள் தீவிரமாக நடந்து வந்தது. இந்நிலையில் ஆரல்வாய்மொழியில் இருந்து நாகர்கோவில் வரை உள்ள இரட்டை வழிப்பாதையில் ட்ராலி மூலம் ரயில்வே பாதுகாப்பு ஆனணயர் இன்று ஆய்வுகளை மேற்கொண்டார். தொடர்ந்து நாளை (மார்ச் 27) அதிவேக சோதனை ரயில் இயக்கி சோதனை மேற்கொள்ளவுள்ளார். இந்த ஆய்வின் போது ரெயில்வே பணியாளர்களை தவிர பொதுமக்கள் அந்த தண்டவாளப்பகுதிகளில் அருகில் செல்ல வேண்டாம் என ரயில்வேத்துறை கேட்டுக்கொண்டுள்ளது. இரட்டை ரயில் பாதை பணிகள் நிறைவு பெற்றதை நொடர்ந்து சென்னை நாகர்கோவில் இடையே கூடுதல் ரயில்கள் இயக்கப்பட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் நாகர்கோவில் வழித்தடத்தில் ரயில்கள் காலதாமதம் இன்றி செல்லும் வாய்ப்பு அதிகரித்துள்ளது என்று தெரிவித்துள்ளனர்.
Tags:    

Similar News