நாமக்கல் - டிரினிடி மகளிர் கல்லூரியில் சாதனையாளர்கள் தின விழா

நாமக்கல் - டிரினிடி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சாதனையாளர்கள் தினவிழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

Update: 2024-02-29 14:06 GMT

நாமக்கல் - டிரினிடி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சாதனையாளர்கள் தினவிழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி செயல் இயக்குநர் அருணா செல்வராஜ் தலைமை தாங்கினார். முதல்வர் எம். ஆர். லட்சுமிநாராயணன் அனைவரையும் வரவேற்றார். இயக்குநர் - உயர்கல்வி அரசுபரமேசுவரன் வாழ்த்துரை வழங்கினார். இந்நிகழ்வில் வகுப்பில் அனைத்துத் துறைகளிலும் முதலாமிடம் பிடித்தவர்கள், தனிப்பாடங்களில் 100-க்கு 100 மதிப்பெண் பெற்றவர்கள், விளையாட்டுப் போட்டிகளில் சாதனை படைத்த மாணவிகள், டிரினிபெஸ்ட் தனித்திறன் மேம்பாட்டுப் போட்டிகளில் சிறப்பிடம் பிடித்தவர்கள், பல்கலைக்கழகத் தேர்வுகளில் 100 சதவீத தேர்ச்சியினை அளித்த மற்றும் கல்லூரிக்கு ஒரு நாள் கூட விடுமுறை எடுக்காத பேராசிரியப் பெருமக்களுக்கு பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது. இந்நிகழ்வில் நாமக்கல் -தங்கம் மருத்துவமனை மருத்துவர் அருணா பிரபு, நிர்வாக அலுவலர் என். எஸ். செந்தில்குமார் உட்பட துறைத்தலைவர்கள், பேராசிரியப் பெருமக்கள் மற்றும் மாணவியர் அனைவரும் கலந்து கொண்டனர். ஓவ்வொரு ஆண்டும் பல்கலைக்கழகத் தேர்வுகளில் சாதனை புரியும் மாணவியருக்கும், அதற்கு காரணமான பேராசிரியப் பெருமக்களுக்கும் கல்லூரி சார்பில் பாராட்டுச் சான்றிதழ்களும்ரூபவ் பரிசுகளும் வழங்கப்பட்டு வருவதாக கல்லூரித் தலைவர் கே. நல்லுசாமி குறிப்பிட்டார்.

Tags:    

Similar News