நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் இரண்டு டன் பூக்களால் அலங்காரம்

அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் இரண்டு டன் பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.

Update: 2024-01-10 13:59 GMT

 அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் 2 டன் பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.

நாமக்கல் நகரின் மைய பகுதியில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இங்கு ஒரே கல்லினால் செதுக்கப்பட்ட 18 அடி உயர ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இ்ந்த கோவிலில் ஆண்டுதோறும் அனுமன் ஜெயந்தி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டும் நாளை ஜனவரி-11 (வியாழக்கிழமை) அனுமன் ஜெயந்தி விழா கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு நாளை அதிகாலை 5 மணிக்கு 1 லட்சத்து 8 வடைமாலை சாத்தப்படுகிறது. காலை 11 மணி அளவில் சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது. தொடர்ந்து ஆஞ்சநேயர் தங்ககவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

Tags:    

Similar News