நாமக்கல் வேட்பாளர் வேட்புமனு தாக்கல் !

Update: 2024-03-25 11:35 GMT

வேட்புமனு தாக்கல்

நாமக்கல் மாவட்டம் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியின் சார்பில் நாமக்கல் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் மாதேஸ்வரன் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட தேர்தல் அதிகாரியும் மாவட்ட ஆட்சிதலைவருமான மருத்துவர் ச.உமா அவர்களிடம் வேட்பு மனுவினை தாக்கல் செய்தார்.

இந்நிகழ்வின் போது ராஜேஷ்குமார் எம்.பி , வனத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன், மேற்கு மாவட்ட கழக செயலாளர் மதுரா செந்தில், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் தலைவர் தேவராஜன் ஆகியோர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News