நாமக்கல் வேளாண்மை அறிவியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா:அபூர்வா ஐஏஎஸ்

நாமக்கல் வேளாண்மை அறிவியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழாவில் அபூர்வா ஐஏஎஸ் பங்கேற்றார்.;

Update: 2024-04-16 16:19 GMT

மாணவர்களுக்கு பட்டம் வழங்கல்

நாமக்கல் மாவட்டம் பரமத்தி அருகே உள்ள பிஜிபி கல்வி நிறுவனங்களில், பிஜிபி வேளாண்மைக் கல்லூரி பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில், பிஜிபி கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர் பழனி ஜி.பெரியசாமி தலைமை வகித்தார். தமிழ்நாடு அரசின் முதன்மை செயலரும், வேளாண் பொருள் உற்பத்தி ஆணையருமான செல்வி. அபூர்வா,

நாமக்கல் பிஜிபி வேளாண்மைக் கல்லூரி மாணவ- மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி சிறப்புரையாற்றிப் பேசுகையில்.... நமது சமூகத்தின் சேவையில் உங்களின் பங்கு மிக முக்கியமானது. உங்களின் சிறந்த செயல்களே உங்களை மேம்படுத்தும்.

Advertisement

அவற்றைக் கற்றுக் கொள்ளும் திறமை உங்களிடம் உள்ளது. வாழ்நாள் முழுவதும் உலக மாற்றத்திற்கு ஏற்ப புதியவற்றை கற்றுக்கொள்ளுங்கள். இந்த நாட்டின் வளர்ச்சிக்கும் உங்களின் வளர்ச்சிக்கும் அது பயன்படும் என்று பேசினார் மேலும், அவர் பேசுகையில்... சமூகத்தில் சாதனை படைத்தவர்கள் உங்களின் முன்மாதிரியாக ஏற்றுக்கொள்ளுங்கள். பிஜிபி கல்வி நிறுவனங்கள் தலைவர் அதற்கு முன்மாதிரியாக உள்ளார்.

இவரைப் போன்ற முன்னோடிகளை தங்கள் வாழ்க்கை முன் மாதிரிகளாக கொள்ள வேண்டும் என்றும் செல்வி அபூர்வா ஐஏஎஸ் கேட்டுக்கொண்டார். முன்னதாக விழா தலைமை உரையாற்றி பேசிய பிஜிபி கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர் பழனி ஜி பெரியசாமி, கல்வி மற்றும் தங்கள் திறமைகளை மேம்படுத்திக் கொண்டு நமது நாட்டின் வளர்ச்சிக்கு மாணவ மாணவிகள் பங்காற்ற வேண்டும்.

வேளாண்மையின் புதிய தொழில்நுட்பங்களை அறிந்து கொண்டு உணவு உற்பத்திக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். மேலும், ஒரு நாட்டின் வளர்ச்சி அந்த நாட்டின் வேளாண்மை உற்பத்தியின் கீழ் அடங்கியுள்ளது என்றார். இந்த நிகழ்ச்சியில், பிஜிபி கல்வி நிறுவனங்களின் தாளாளர் எம்.கணபதி, பிஜிபி வேளாண்மை அறிவியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் என்.ஓ. கோபால், பேராசிரியர்கள், மாணவ மாணவிகள் உள்பட பலரும் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News