கேஸ் ஏஜென்ஸிக்கு அபரதாம் வழங்கி நாமக்கல் நுகர்வோர் கோர்ட் உத்தரவு

பணம் பெற்றுக் கொண்டு சிலிண்டர் டெலிவரி செய்யாத கேஸ் ஏஜென்ஸிக்கு ரூ. 8,500 அபரதாம் - நாமக்கல் நுகர்வோர் கோர்ட் உத்தரவு

Update: 2023-12-12 17:55 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

பணத்தைப் பெற்றுக் கொண்டு, சமையல் கேஸ் சிலிண்டர் வழங்காத கேஸ் ஏஜென்சி ரூ 8,500/- இழப்பீடு வழங்க நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் அருகே உள்ள செக்குப்பட்டியில் வசிப்பவர் சீனிவாசன். இவர் நாமக்கல் நகரில் உள்ள எச்.பி. சமையல் கேஸ் சிலிண்டர் விநியோகம் செய்யும், தனியார் ஏஜென்சி ஒன்றின் வாடிக்கையாளராக உள்ளார். இந்த நிறுவனத்திற்கு, கடந்த 2019ம் ஆண்டு, டிசம்பர் மாதத்தில் இவர் எச்பி நிறுவன சிலிண்டரை பெறுவதற்காக ஆன்லைன் மூலம் புக்கிங் செய்து, மாற்று சிலிண்டருக்காக ரூ. 715 ஐ ஆன்லைன் மூலம் செலுத்தியுள்ளார். பணம் செலுத்தி இரண்டு வாரங்கள் கழித்தும் சிலிண்டர் வராததால் அவர் ஆன்லைன் மூலம் எச்.பி கம்பெனியின் வெப்சைட்டில் சென்று பார்த்த போது அவருக்கு ஏற்கனவே, சிலிண்டர் டெலிவரி செய்யப்பட்டதாக தகவல் பதிவாகியுள்ளது.

இது குறித்து கேஸ் ஏஜென்சி மேனேஜரிடம் நேரில் சென்று, கேட்டபோது விரைவில் கேஸ் சிலிண்டர் வந்து விடும் என்றும், அதற்கான மானியத் தொகையும் கணக்கில் வரவு வைக்கப்பட்டு விடும் என்றும் தெரிவித்துள்ளார். பின்னர், கேஸ் ஏஜென்சி நிர்வாகத்தனர், அவர்களாகவே சீனிவாசனின் பெயரில் மீண்டும் சிலிண்டருக்கு பதிவு செய்து, அதனை அவரது வீட்டுக்கு சென்று அவரது அம்மாவிடம் ரூ. 715 பணம் பெற்றுக்கொண்டு வழங்கியுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த சீனிவாசன் கடந்த 2020 ஆம் ஆண்டு நாமக்கல் மாவட்ட நுகர்வோர் கோர்ட்டில் கேஸ் ஏஜென்ஸி மீது வழக்கு தாக்கல் செய்திருந்தார். வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில் நேற்று, நாமக்கல் மாவட்ட நுகர்வோர் கோர்ட் நீதிபதி டாக்டர் ராமராஜ் மற்றும் உறுப்பினர் ரமோலா ஆகியோர் தீர்ப்பளித்தனர். இதில் வழக்கு தாக்கல் செய்த சீனிவாசன் செலுத்திய பணத்திற்கு கேஸ் சிலிண்டர் வழங்கப்படவில்லை என்று நிரூபிக்கப்பட்டுள்ளதால், கேஸ் ஏஜென்சி வழக்கு தாக்கல் செய்தவருக்கு சிலிண்டருக்காக செலுத்திய தொகை ரூ 715, சேவை குறைபாட்டால் ஏற்பட்ட இழப்பீட்டிற்கு ரூ 7,500 மற்றும் வழக்கின் செலவு தொகை ரூ 1,000 ஆக மொத்தம் ரூ 9,215ஐ 4 வாரங்களுக்குள் அவருக்கு வழங்க வேண்டும் என்று உத்திரவிடப்பட்டுள்ளது.

Tags:    

Similar News