நாமக்கல் எம்பி மாதேஸ்வரன் மாத சம்பளத்தை கல்லூரி மாணவியின் மேற்படிப்புக்கு வழங்கல் !

கல்லூரி மாணவி P.தர்ஷினியின் கல்லூரி மேற்படிப்புக்கு ஊக்க தொகைக்கான காசோலையை நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் தனது முதல் மாத சம்பளத்தில் இருந்து வி.எஸ்.மாதேஸ்வரன் எம்பி வழங்கினார்.

Update: 2024-07-16 06:25 GMT

நாமக்கல்

நாமக்கல்- சேலம் சாலையில் உள்ள கரையான்புதூர் அருந்ததியர் காலனியை சேர்ந்த கல்லூரி மாணவி P.தர்ஷினியின் கல்லூரி மேற்படிப்புக்கு ஊக்க தொகைக்கான காசோலையை நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் தனது முதல் மாத சம்பளத்தில் இருந்து வி.எஸ்.மாதேஸ்வரன் எம்பி வழங்கினார்.இந்நிகழ்வில் நாமக்கல் ஒருங்கிணைந்த மாவட்ட விவசாய அணி செயலாளர் ரவிச்சந்திரன், மாவட்ட பொருளாளர் மணி மாவட்ட தலைமை நிலைய செயலாளர் செல்வராஜ்,மாவட்ட இணை செயலாளர் தமிழரசு,ஒன்றிய செயலாளர்கள் புதுச்சத்திரம் தெற்கு வேல்முருகன், நாமக்கல் கிழக்கு சசிக்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.
Tags:    

Similar News