நாமக்கல் நகராட்சி துப்புரவு பணியாளர்கள் திடீர் போராட்டம்!
பேருந்து நிலையத்தில் உள்ள துப்புரவு ஆய்வாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Update: 2024-03-06 05:12 GMT
நாமக்கல் பேருந்து நிலையத்தில் நாமக்கல் நகராட்சி துப்புரவு பணியாளர்கள் இன்று காலை திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். நாமக்கல் நகராட்சியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு கடந்த மூன்று மாத காலமாக அரியர் பணம் கணக்கில் வரவு வைக்காத காரணத்தால் இதை கண்டித்து இன்று காலை பேருந்து நிலையத்தில் உள்ள துப்புரவு ஆய்வாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. விரைந்து வந்த நாமக்கல் நகராட்சி ஆணையர் சென்னு கிருஷ்ணன் மற்றும் நாமக்கல் நகரமன்ற தலைவர் கலாநிதி,துணைத் தலைவர் பூபதி ஆகியோர் காவல்துறையினர் உடன் பேச்சுவார்த்தை செய்து அனுப்பி வைத்தனர். இதனால் நாமக்கல் பேருந்து நிலையத்தில் சற்று நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.