நாமக்கல் நவோதயா பள்ளி மாணவர்கள் மண்டல அளவில் நடைபெற்ற ஜூடோ போட்டியில் மாபெரும் சாதனை !!!

நாமக்கல் நவோதயா அகாடமி சீனியர் செகண்டரி பள்ளி மாணவ, மாணவியர்கள் மண்டல அளவில் நடைபெற்ற ஜூடோ போட்டியில் தங்கம் வென்று மாபெரும் சாதனை படைத்துள்ளனர்.

Update: 2024-09-24 10:05 GMT

 நவோதயா பள்ளி

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

சிபிஎஸ்இ பள்ளிகளுக்கிடையேயான ஜூடோ போட்டி மண்டல அளவில் கடந்த 20, 21, 22., ஆம் தேதிகளில் சென்னை வேளாங்கண்ணி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. அதில் தெலுங்கானா, அந்தமான் நிக்கோபாத், தமிழ்நாடு, பாண்டிச்சேரி. ஆகிய மாநிலங்களில் இருந்து சுமார் 133 பள்ளிகளில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவியர்கள் கலந்துகொண்டார்கள் அதில் நமது நாமக்கல் மாவட்டத்திலிருந்து நவோதாய அகாடமி பள்ளி மாணவ, மாணவியர் 11 பேர் கலந்துகொண்டனர். அதில் சஞ்சய் 12ஆம் வகுப்பு கோல்டு மெடல், கேமவர்ஷினி 11ஆம் வகுப்பு சில்வர் மெடல், இவர்கள் இருவரும் தேசிய அளவிலான போட்டியில் கலந்துகொள்வதற்கான தகுதி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் அண்ணாமலை 12ஆம் வகுப்பு – பிரான்ஸ் மெடல், அங்கிதா 11ஆம் வகுப்பு – பிரான்ஸ்மெடல், கௌரிஸ் 10ஆம் வகுப்பு; பிரான்ஸ் மெடல், அபிகிருத்திக் 10ஆம் வகுப்பு - பிரான்ஸ் மெடல், கன்ஷிகா 9ஆம் வகுப்பு – பிரான்ஸ் மெடல் என மொத்தம் ஏழு பதக்கங்களைப் பெற்று இமாலய சாதனைப் படைத்துள்ளனர். அனைவருக்கும் இன்று 23.09.2024 திங்கள் கிழமை காலை பள்ளியில் நடைபெற்ற பள்ளி வழிபாட்டுக்கூட்டத்தில் பள்ளியின் பொருளாளர் தேனருவி அவர்கள் பதக்கங்களை அணிவித்து பாராட்டு தெரிவித்தார்கள்.

அவர் பேசுகையில். “பதக்கம் வென்ற மாணவ, மாணவியர்களை வெகுவாக பாரட்டினார்கள் மேல் படிப்பிற்கு செல்லும் போது மண்டல அளவிலான போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு சிறப்பு மதிப்பெண் கொடுக்கப்படும், என்றும் அனைவரும் ஏதாவது ஒரு விளையாட்டில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டு நாட்டிற்கு பெருமை சேர்க்கும் வகையில் வெற்றி பெற வேண்டும் என்றும் ஒத்துழைப்பு வழங்கிய பெற்றோருக்கும், உறுதுணையாகவும், குழந்தைகளை பாதுகாப்பாக அழைத்து சென்றுவந்த ஜூடோ மாஸ்டர் ஜெயபிரகாஷ் அவர்களையும் வாழ்த்தி பாராட்டினார். இறுதியில் பள்ளி முதல்வர் ஆண்டனி ராஜ் அவர்கள் போட்டியில் கலந்துகொண்ட அனைவருக்கும் நன்றி கூறி பாராட்டினார்.

Tags:    

Similar News