நாமக்கல்லில் என்கவுண்டர்; சினிமா பாணியில் கொள்ளையர்களை பிடித்த போலீஸ்!!

கேரளாவில் இருந்து பணத்தை கொள்ளையடித்து வந்த வட மாநில கொள்ளையர்களை நாமக்கல்லில் போலீஸார் சுற்றி வளைத்து பிடித்துள்ளனர்.;

Update: 2024-09-27 11:31 GMT
நாமக்கல்லில் என்கவுண்டர்; சினிமா பாணியில் கொள்ளையர்களை பிடித்த போலீஸ்!!

Container lorry

  • whatsapp icon
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

கேரளாவில் இருந்து பணத்தை கொள்ளையடித்து வந்த வட மாநில கொள்ளையர்களை நாமக்கல்லில் போலீஸார் சுற்றி வளைத்து பிடித்துள்ளனர். கேரளா மாநிலம் திருச்சூரிலில் மூன்று ஏடிஎம்களிலிருந்து சுமார் 60 லட்சத்திற்கும் அதிகமான பணத்தை கொள்ளையடித்துக்கொண்டு கண்டெய்னர் லாரியில் வந்த வட மாநில இளைஞர்களை நாமக்கலில் போலீஸார் சுற்றி வளைத்து பிடிக்க முயன்றுள்ளனர். அப்போது பயங்கர ஆயுதங்களுடன் இருந்த வட மாநில இளைஞர்கள் போலீஸாரை தாக்கிவிட்டு தப்ப முயன்றுள்ளனர். அப்போது இரண்டு காவலர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதை அடுத்து துப்பாக்கி சூடு நடைபெற்றது. இதில் ஜமாலுதீன் என்ற 37 வயது ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்தவர் உயிரிழந்தார். கொள்ளையடிக்கப்பட்ட பணத்துடன் ஏழு பேர் வந்ததாக தெரிகிறது. அதில் ஒரு நபர் தப்பி சென்று காட்டிற்குள் மறைந்து விட்ட நிலையில் மீதமுள்ள ஐந்து பேரை போலீஸார் கைது செய்து வெப்படை காவல் நிலையத்தில் அடைத்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே காயமடைந்த காவலர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

Tags:    

Similar News