ஸ்கேட்டிங் போட்டியில் நாமக்கல் பள்ளி மாணவர்கள் சாதனை

கொங்கு மண்டல ஸ்கேட்டிங் விளையாட்டு போட்டியில் சாதனை படைத்த, கொங்குநாடு சீனியர் செகண்டரி பள்ளி மாணவர்களை பள்ளி தாளாளர் டாக்டர் ராஜன் பாராட்டினார்.

Update: 2024-02-17 12:15 GMT

ஸ்கேட்டிங் போட்டியில் நாமக்கல் பள்ளி மாணவர்கள் சாதனை

கொங்கு மண்டல அளவிலான ஸ்கேட்டிங் விளையாட்டு போட்டியில் வேலகவுண்டம்பட்டி கொங்குநாடு சீனியர் செகண்டரி பள்ளி மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர். கொங்கு மண்டல அளவிலான, கொங்கு டிவிஷனல் ரோலர் ஸ்கேட்டிங் சேம்பியன்ஷிப் விளையாட்டுப் போட்டிகள் (KONGU டிவிசயோனால் (ROLLAR SKATING CHAMPIONSHIP – 2024) திருப்பூரில் நடைபெற்றது. சேலம், கரூர், திருப்பூர், ஈரோடு, நாமக்கல் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த பள்ளி மாணவ, மாணவிகள் இந்த ஸ்கேட்டிங் போட்டிகளில் பங்கு பெற்றனர். இதில் வேலகவுண்டம்பட்டி கொங்குநாடு சீனியர் செகண்டரி சி.பி.எஸ்இ பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு, சிறப்பாக விளையாடி 14 தங்கம், 8 வெள்ளி மற்றும் 11 வெண்கலப் பதக்கங்கள் வென்று ஒட்டு மொத்த சாம்பியன்ஷிப்பில் இரண்டாவது இடத்தைப் பெற்று சாதனை படைத்தனர். ஸ்கேட்டிங் போட்டிகளில் பதக்கம் வென்ற மாணவ மாணவிகளை, கொங்குநாடு கல்வி நிறுவனங்களின் தாளாளர் டாக்டர் ராஜன், மூத்த முதல்வர் யசோதா, முதல்வர் காயத்திரி, ஸ்கேட்டிங் பயிற்சியாளர் மோகன்ராஜ், உடற்கல்வி ஆசிரியர் கோபி மற்றும் ஆசிரியர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.
Tags:    

Similar News