நாமக்கல் - டிரினிடி மகளிர் கல்லூரி மாணவிகளுக்கு வேலைவாய்ப்பு ஆணை

நாமக்கல் - டிரினிடி மகளிர் கல்லூரி மாணவிகளுக்கு டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் பணிபுரிய வேலைவாய்ப்பு ஆணை.

Update: 2024-03-05 06:38 GMT

நாமக்கல் - டிரினிடி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவியர் ௧௦௯ பேருக்கு ஓசூர் - டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு பணி நியமன ஆணை கல்லூரி வளாகத்தில் வழங்கப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டம் - ஒசூர் அருகே உள்ள கெலமங்கலத்தில் இந்தியாவின் புகழ்பெற்ற டாடா நிறுவனமானது ஐபோன் உதிரிபாகங்கள் தயாரிப்பு தொழிற்சாலையினை நிறுவியுள்ளது. மகளிர் மேம்பாடு அடையும் வகையில் இத்தொழிற்சாலையில் உள்ள பல்வேறு பணிகளுக்கு பெண்கள் தேர்வு செய்யப்படுகின்றன. கல்லூரியில் நடைபெற்ற வேலைவாய்ப்பு வளாகத் தேர்வில் இந்நிறுவனத்தின் மனித வள மேம்பாட்டுத் துணை மேலாளர் எஸ். பிரபு மற்றும் இந்நிறுவனத்தின் குழுத் தேர்வுத் தலைவர் ஜே. சுகன் ஆகியோர் கலந்து கொண்டு எழுத்துத் தேர்வுகள், குழுக் கலந்துரையாடல் மற்றும் நேர்முகத் தேர்வுகள் ஆகியவற்றினை நடத்தினர். இதில் இறுதி ஆண்டு பயிலும் இந்நிறுவனத்தில் பணிபுரிய விருப்பம் உள்ள ஏறத்தாழ 300 மாணவியர் கலந்து கொண்டனர். இதில் இறுதியாக 109 மாணவிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு ஜுன் 1 முதல் பணியில் சேர வேலைவாய்ப்பு ஆணை வழங்கப்பட்டது. பணிக்கு தேர்வு செய்யப்பட்ட மாணவிகளை கல்லூரித் தலைவர் கே. நல்லுசாமி, செயலர் எஸ். செல்வராஜ், செயல் இயக்குநர் அருணா செல்வராஜ், முதல்வர் எம். ஆர். லட்சுமிநாராயணன், இயக்குநர் உயர்கல்வி அரசுபரமேசுவரன், நிர்வாக அலுவலர் என்.எஸ். செந்தில்குமார் ஆகியோர் பாராட்டினர். இந்நிகழ்வில் வேலைவாய்ப்பு அலுவலர் பி. லட்சுமி, இவ்வமைப்பின் உறுப்பினர்கள் எஸ். ஹேமலதா, பி. அபிராமி, எஸ். ரேவதி, கே. சரண்யா, எஸ். கலைவாணி, ஏ. ராஜேஸ்வரி மற்றும் நான் முதல்வன் ஒருங்கிணைப்பாளர் பி;. விஷ்ணுபிரியா ஆகியோர் கலந்து கொண்டனர். இவ்வேலைவாய்ப்பு வளாகத் தேர்வினை கல்லூரியில் வேலைவாய்ப்பு மையமும், நான் முதல்வன் அமைப்பும் இணைந்து நடத்தியது. 

Tags:    

Similar News