நாமக்கல் - டிரினிடி மகளிர் கல்லூரியின் முன்னாள் தலைவருக்கு முதலாமாண்டு நினைவஞ்சலி நிகழ்வு !
நாமக்கல் - டிரினிடி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முன்னாள் தலைவர் மற்றும் நாமக்கல் - பிஎஸ்கே தொழில்குழுமத்தின் முதன்மை இயக்குநருமான பிஎஸ்கே செங்கோடன் அவர்களின் முதலாமாண்டு நினைவஞ்சலி நிகழ்வு இன்று (24.05.2024) கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
நாமக்கல் - புதன்சந்தை – ஏளுர் அருகே பெரும்பாலிப்பட்டி என்ற சிற்றூரில் சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்து தனது அயராத உழைப்பால் உயர்ந்த நிலையினை அடைந்தவர். அவர் ஆற்றிய கல்விப் பணி, ஆன்மீகப்பணி மற்றும் சமுதாயப் பணிகள் போற்றுதலுக்குரியவை என்று இந்நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் பெருமிதத்துடன் குறிப்பிட்டனர். இந்நிகழ்வில் கல்லூரித் தலைவர் கே. நல்லுசாமி, செயலர் எஸ். செல்வராஜ், செயல் இயக்குநர் அருணா செல்வராஜ், முதல்வர் எம். ஆர். லட்சுமிநாராயணன், இயக்குநர் உயர்கல்வி அரசுபரமேசுவரன், நிர்வாக அலுவலர் என். எஸ். செந்தில்குமார், பேராசிரியப் பெருமக்கள் எம். சசிகலா, ஏ. லதா, எஸ். உஷாராணி, பி. கவிதா, ஆர். ரூபா, வீ. அர்ச்சனா, எம். செல்வி, எஸ். அனிதா, எஸ். ரேவதி, கே.பி. தீபிகா, பி. அபிராமி, எம். ரினீஷா, அலுவலகப் பணியாளர்கள் எம். சண்முகம், எஸ். மணிவண்ணன், எம். ஸ்ரீதரன் உட்பட பலர் கலந்து கொண்டு அவருக்கு மலரஞ்சலி செலுத்தினர்.