தமிழில் பெயர் பலகை கட்டாயம் கீழ்வேளூர் பேரூராட்சி செயல் அலுவலர் அறிவிப்பு
தொழில், வணிக உரிமம் பெற தமிழில் பெயர் பலகை கட்டாயம் கீழ்வேளூர் பேரூராட்சி செயல் அலுவலர் அறிவிப்பு
Update: 2024-02-17 09:56 GMT
தொழில், வணிக உரிமம் பெற தமிழில் பெயர் பலகை கட்டாயம் கீழ்வேளூர் பேரூராட்சி செயல் அலுவலர் அறிவிப்புத்துள்ளார். கீழ்வேளூர் பேரூராட்சி செயல் அலுவலர் குகன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பாதாவது: கீழ்வேளூர் பகுதியில் செயல் படும் வணிக நிறுவனங்கள் வரும் 2024- 2025 நிதி ஆண்டுக்கு முன்னதாக தொழில் வணிக உரிமம் பெறவேண்டும் தமிழ்நாடு நகர்ப் புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டம் 1998 மற்றும் தமிழ் நாடு நகரப்புற உள்ளாட்சி அமைப்புகள் விதிகள் 2023 படி யான கட்டணம் செலுத்தி வணிக உரிமத்திற்கு விண்ணப்பம் அளிக்க வேண்டும். வணிக நிறுவன பெயர் பலகை கட்டாயம் தமிழில் இருக்க வேண்டும். வாடிக்கையாளர்களுக்கு குடிநீர் வசதி இருக்க வேண்டும். தீத்தடுப்பு விதிகள் பின் பற்ற வேண்டும். பெரிய வணிக நிறுவனங்களில் கண்காணிப்பு படக்கருவிகள் நிறுவ வேண்டும். வணிக நிறுவனங்கள் திடக் கழிவு மேலாண்மை விதிகளின் படி குப்பைகளை தரம் பிரித்து கொடுக்க வேண்டும். வணிக நிறுவனங்களை சுகாதாரமாக பராமரிக்க வேண்டும். அரசால் தடை செய்ய பட்ட பொருள்களை உற்பத்தி செய்வதோ விற்பனை செய்வதோ கூடாது என தெரிவிக்கப் பட்டுள்ளது. இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கீழ்வேளூர பேரூராட்சி செயல் அலுவலர் . குகன் தெரிவித்துள்ளார்.