நம்ம திருப்பூர் புதிய செயலி துவக்கம்
திருப்பூர் மாநகராட்சியில் சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ் நம்ம திருப்பூர் என்ற புதிய செயலி துவங்கப்பட்டது.;
Update: 2024-06-27 04:55 GMT
நம்ம திருப்பூர் செயலி துவக்கம்
திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் தலைமையில் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் பவன் குமார் ஜி கிரியப்பனவர் முன்னிலையில் மாநகராட்சி மைய அலுவலகத்தில் செயல்பட்டு வரும் ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தில் சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ் நம்ம திருப்பூர் என்ற புதிய செயலியை துவக்கி வைத்தார்கள். உடன் மண்டல தலைவர்கள் உமாமகேஸ்வரி, கோவிந்தராஜ், கோவிந்தசாமி, தலைமை பொறியாளர் திருமாவளவன், துணை மாநகர பொறியாளர் கண்ணன் உட்பட பலர் இருந்தனர்.