சித்தாமூர் ஒன்றியத்தில் நம்ம ஊரில் நம்ம எம் எல் ஏ நிகழ்ச்சி

பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்

Update: 2023-12-20 02:53 GMT

சித்தாமூர் ஒன்றியத்தில் நம்ம ஊரில் நம்ம எம் எல் ஏ நிகழ்ச்சி

செங்கல்பட்டு மாவட்டம்,சித்தாமூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கீழ்மேல்மருவத்தூர், சோத்துப்பாக்கம், பூங்குனம், பெரியகயப்பாக்கம், இந்தளூர் ஆகிய ஊராட்சிகளில் 'நம்ம ஊரில் நம்ம எம்எல்ஏ' நிகழ்ச்சியில் நடைபெற்றது. இதில் விசிக கட்சியின் செய்யூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பனையூர் மு.பாபு பொதுமக்களிடம் இருந்து பட்டா பெயர் மாற்றம், முதியோர் உதவித்தொகை மகளிர் உரிமைத் தொகை ஊனமுற்றோர் உதவித்தொகை உள்ளிட்ட மனுக்கள் பெற்றுக் கொண்டார். இந்த நிகழ்ச்சியில் சித்தாமூர் ஒன்றிய குழு பெருந்தலைவர் ஏழுமலை, விசிக கட்சி மாவட்ட செயலாளர் தமிழினி, திமுக ஒன்றிய செயலாளர் சிற்றரசு, மாவட்ட கவுன்சிலர் டைகர்குணா, ஊராட்சி மன்ற தலைவர்கள் மாசிலாமணி, ஸ்ரீதர், உஷாகருணாகரன், பிரபாவதிசிவக்குமார், லோகநாதன், விசிக கட்சி ஒன்றிய செயலாளர்கள் தமிழ்விரும்பி, புகழேந்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News