பெரம்பலூரில் தேசிய ஜனநாயக கூட்டணி செயல்வீரர்கள் கூட்டம்

பெரம்பலூரில் தேசிய ஜனநாயக கூட்டணி செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.

Update: 2024-03-24 10:20 GMT

கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் 

 பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட பெரம்பலூர் சட்டமன்ற தொகுதி தேசிய ஜனநாயக கூட்டணி செயல்வீரர்கள் கூட்டம் , துறைமங்கலம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

இதில் இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனர் டாக்டர் பாரிவேந்தர் மற்றும் தலைவர் ரவி பச்சமுத்து , ஓபிஎஸ் அணியின் அம்மா பேரவை செயலாளர் ஆர்.டி. இராமச்சந்திரன், பாஜக மாவட்ட தலைவர் செல்வராஜ், அமமுக மாவட்ட செயலாளர் கார்த்திகேயன்,

மற்றும் பாமக, தமிழ் மாநில காங்கிரஸ் ஆகிய தேசிய ஜனநாயக கூட்டணியை சேர்ந்த கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர், இதில் இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனர் டாக்டர் பாரிவேந்தர் பேசுகையில், கடந்த முறை தேர்தலை விட இந்த முறை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வாக்களிக்க வேண்டும், நான் வெற்றி பெற்றால், சின்ன வெங்காயம் மதிப்பு கூட்டு பொருளாக மாற்றுவதற்கு அத்துறை அமைச்சரை பார்த்து பேசி அதற்கான  திட்டத்தை கொண்டு வருவேன். 

பாதி பணிகள் முடிந்து விட்ட நிலையில் உள்ள அரியலூர் பெரம்பலூர் நாமக்கல் ரயில் பாதை திட்டத்தினை கண்டிப்பாக நிறைவேற்றித் தருவேன் என்னை மீண்டும் தேர்ந்தெடுத்தால் MP யாக தேர்ந்தெடுத்தால் கடந்த முறை போல இந்த முறையும் தொகுதிக்கு 50 பேர் விதம் 6 சட்டமன்ற தொகுதிகளிலும் ஆண்டுக்கு 300 மாணவர்களுக்கு SRM பல்கலைக்கழகத்தில் இலவச கல்வி வழங்கும் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்றார்.

ஒட்டுக்கு பணம் கொடுக்கும் பாவச் செயலை கற்று கொடுத்தவர்கள் திராவிட திருவாளர்கள். எந்த காரணத்தை கொண்டும், அவர்கள் ஓட்டுக்கு கொடுக்கும் பணத்தை வாங்க கூடாது. அவர்கள் பணத்தை கொடுத்துவிட்டு ஆட்சிக்கு வந்தவுடன் மிகப் பெரிய அளவில் ஊழல் செய்வார்கள் மீண்டும் தேர்தலின்போது பணம் கொடுப்பார்கள் பிறகு ஊழல் செய்வார்கள் இதுதான் அவர்களின் முழு திறமை.

நீங்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும் நல்லவர்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்று பேசினார். இந்நிகழ்ச்சியில் தேசிய ஜனநாயக கூட்டணியை சேர்ந்த நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News