தேசிய ஜனநாயக கூட்டணி நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம்
பாப்பாரபட்டியில் நடந்த தேசிய ஜனநாயக கூட்டணி நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்திற்கு பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் ஜிகே. மணி தலைமையில் நடைபெற்றது.;
Update: 2024-04-30 08:51 GMT
நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம்
தர்மபுரி மாவட்ட மற்றும் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட பென்னாகரம் சட்டமன்ற தொகுதி பாப்பாரப்பட்டியில் தேசிய ஜனநாயக கூட்டணி நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு பாமக கௌரவத் தலைவர் மற்றும் பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் ஜிகே. மணி தலைமை தாங்கினார். உடன் பாஜக நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.