தென்காசியில் தேசிய குடற்புழு நீக்க முகாம்

தென்காசி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற தேசிய குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

Update: 2024-02-10 03:36 GMT
தென்காசியில் தேசிய குடற்புழு நீக்க முகாம் நடைபெற்றது

தென்காசி மாவட்டம், தென்காசி இ.சி.ஈ அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற முகாமில் மாவட்ட ஆட்சியா் ஏகே.கமல்கிஷோா் தலைமையில் மாணவா்கள், ஆ சிரியா்கள், சுகாதாரப் பணியாளா்கள் உறுதிமொழி ஏற்றனா். தொடா்ந்து செய்தியாளா்களிடம் ஆட்சியா் கூறியதாவது, தென்காசி மாவட்டத்தில் 38,1783 சிறாா்களுக்கும், 79,313 மகளிருக்கும் குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்படவுள்ளது.

விடுபட்ட குழந்தைகளுக்கு 16.02.2024 அன்று குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்படும். 1 முதல் 2 வயதிற்குள்பட்ட குழந்தைகளுக்கு அரை மாத்திரை, 2 முதல் 19 வயது வரை உள்ள குழந்தைகள் மற்றும் 20-30 வயது வரை உள்ள மகளிருக்கு 1 மாத்திரை வழங்கப்படும்.

குடற்புழு நீக்க மாத்திரையை தகுதியுடையவா்கள் பெற்று பயன்பெற வேண்டும் என்றாா் அவா். துணை இயக்குநா் (சுகாதாரப் பணிகள்)முரளி சங்கா் வரவேற்றாா். உதவி மக்கள் தொடா்பு அலுவலா்) ராமசுப்பிரமணியன் நன்றி கூறினாா்.

Tags:    

Similar News