தேசிய மருத்துவர்கள் தினம் கொண்டாட்டம்

திருப்புவனம் அரசு மருத்துவமனையில் தேசிய மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு தலைமை மருத்துவர் டாக்டர் ஸ்ரீவித்யா தலைமையில் மருத்துவர்கள் கேக் வெட்டி கொண்டாடினர்

Update: 2024-07-02 03:48 GMT

மருத்துவர்கள் தின கொண்டாட்டம்

தேசிய சுகாதார துறையின் முதல் தலைவரான டாக்டர் பிதான் சந்திர ராய் பிறந்த நாளான ஜூலை 1ம் தேதி " டாக்டர்கள் தினமாக " நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. டாக்டர்களின் தன்னலமற்ற சேவையை பாராட்டும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 1ம் தேதி கொண்டாடப்படும் இந்த விழாவை ஒட்டி திருப்புவனம் அரசு மருத்துவமனையில் டாக்டர்கள், நர்ஸ்கள், சுகாதார துறை ஊழியர்கள் இணைந்து நேற்று  " கேக்" வெட்டி கொண்டாடினர். . மதுரை, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் அதிகளவு கர்ப்பிணிக்ள் திருப்புவனம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். நேற்று " டாக்டர்கள் தினத்தை " முன்னிட்டு அனைவரும் இணைந்து கொண்டாடினர்
Tags:    

Similar News