மேட்டூரில் தேசிய சாலை பாதுகாப்பு மாத நிறைவு விழா சைக்கிள் பேரணி

சேலம் மாவட்டம், மேட்டூரில் தேசிய சாலை பாதுகாப்பு மாத நிறைவு விழா முன்னிட்டு மோட்டார் சைக்கிள் பேரணி நடைபெற்றது.

Update: 2024-02-02 14:05 GMT


சேலம் மாவட்டம், மேட்டூரில் தேசிய சாலை பாதுகாப்பு மாத நிறைவு விழா முன்னிட்டு மோட்டார் சைக்கிள் பேரணி நடைபெற்றது.


மேட்டூர் அருகே தொட்டில் பட்டியில் போக்குவரத்து காவல்துறை மற்றும் வட்டார போக்குவரத்து துறை இணைந்து தேசிய சாலை பாதுகாப்பு மாத நிறைவு விழா கொண்டாடும விதமாக சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மோட்டார் சைக்கிள் பேரணி நடத்தப்பட்டது.பேரணியை மேட்டூர் சார் ஆட்சியர் பொன்மணி கொடியசைத்து துவக்கி வைத்தார்.

தொட்டில் பட்டி பிரிவு சாலையில் தொடங்கிய மோட்டார் சைக்கிள் பேரணி நான்கு ரோடு, மாதா கோவில், பேருந்து நிலையம், ஒர்க் ஷாப் கார்னர் வழியாக கிழக்கு நெடுஞ்சாலையில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்தை வந்தடைந்தது. 200 - கும் மேற்பட்ட காவலர்கள் மற்றும் பொதுமக்கள் தலைக்கவசம் அணிந்து மோட்டார் சைக்கிள் பேரணியில் பங்கேற்றனர்.

பேரணியில் பங்கேற்றவர்கள் சாலை பாதுகாப்பு அவசியத்தை விளக்கும் வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் பேரணியில் பங்கேற்றனர்.நிகழ்ச்சியில் மேட்டூர் காவல்துணை கண்காணிப்பாளர் மரியமுத்து. வட்டார போக்குவரத்து அலுவலர் சுப்பிரமணியன், மோட்டார் வாகன ஆய்வாளர் மீனா குமாரி , மேட்டூர் காவல் ஆய்வாளர் சாவித்திரி உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.

Tags:    

Similar News