தேசிய அறிவியல் தின விழா மற்றும் அறிவியல் கண்காட்சி !

பழனி அருகே உள்ள தாளையூத்து சுப்பிரமணியா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், தேசிய அறிவியல் தின விழா மற்றும் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.

Update: 2024-03-14 07:22 GMT

தேசிய அறிவியல் தின விழா

பழனி அருகே உள்ள தாளையூத்து சுப்பிரமணியா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், தேசிய அறிவியல் தின விழா மற்றும் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக பழனி காவல்துறை துணை கண்காணிப்பாளர் க. சுப்பையா, காவல்துறை ஆய்வாளர் தென்னரசு ஆகியோர் கலந்து கொண்டு அனைத்து துறை சார்ந்த அறிவியல் தின கண்காட்சியை திறந்து வைத்து சிறப்புரை ஆற்றினர்.100க்கும் மேற்பட்ட அறிவியல் செய்முறை விளக்க கண்காட்சி விழாவில் இடம் பெற்று உள்ளது. விழா ஏற்பாடுகளை அனைத்து அறிவியல் துறை ஆசிரியர்களும் மாணவர்களும் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.
Tags:    

Similar News