தேசிய வாக்காளர் தின உறுதிமொழி ஏற்பு
திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் நடந்த தேசிய வாக்காளர் தின உறுதி மொழி ஏற்பு நிகழ்வில் மாநகராட்சி அலுவலர்கள்,பணியாளர்கள் கலந்துகொண்டு உறுதிமொழி ஏற்றனர்.;
Update: 2024-01-25 06:40 GMT
உறுதிமொழி ஏற்பு
திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் பவன் குமார் ஜி கிரியப்பனவர் தலைமையில் மாநகராட்சி மைய அலுவலக வளாகத்தில் இந்திய தேர்தல் ஆணையத்தின் தேசிய வாக்காளர் தினம் கொண்டாடப்படுவதால் 114 திருப்பூர் தெற்கு சட்டமன்றத் தொகுதியில் தேசிய வாக்காளர் தினம் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். உடன் துணை ஆணையாளர்கள் லட்சுமணன், சுல்தானா,நகர் நல அலுவலர் கௌரி சரவணன், துணை மாநகர பொறியாளர் செல்வநாயகம், தேர்தல் துணை வட்டாட்சியர் வசந்தா, மாநகராட்சி அலுவலர்கள் உட்பட பலர் உள்ளனர்