நர்சரி பள்ளியில் இயற்கை உணவு திருவிழா
திண்டுக்கல் மாவட்டம், பாலசமுத்திரம் இலஞ்சியம் நர்சரி பள்ளியில் இயற்கை உணவு திருவிழா நடந்தது.;
Update: 2024-06-21 09:34 GMT
நர்சரி பள்ளியில் இயற்கை உணவு திருவிழா
பழநி அருகே பாலசமுத்திரம் இலஞ்சியம் நர்சரி பள்ளியில் இயற்கை உணவு திருவிழா நடந்தது. பள்ளியின் தாளாளர் சுசீலா தலைமை வகித்தார். பள்ளியின் நிர்வாகி ராமலிங்கம் முன்னிலை வகித்தார். பள்ளியின் முதல்வர் பாலச்சந்தர் வரவேற்று பேசினார்.
விழாவில் பள்ளி மாணவ- மாணவிகள் அடுப்பில் சமைக்காமல் இயற்கையான முறையில் பழங்கள் மற்றும் காய்களை கொண்டு உணவு வகைகள், ஜூஸ் வகைகள் தயாரித்து காட்சிக்கு வைத்தனர். சிறந்த உணவுகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.