இயற்கை மருத்துவ முறை செயல்விளக்க பயிற்சி !

கோவில்பட்டியில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு இயற்கை மருத்துவம் மற்றும் யோகா செயல் விளக்க பயிற்சி நடந்தது.

Update: 2024-06-19 09:55 GMT

பயிற்சி

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அரசு தலைமை மாவட்ட மருத்துவமனை இயற்கை மற்றும் யோகா துறை, வாழும் கலை அமைப்பு ஆகியவை சார்பில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு இயற்கை மருத்துவம் மற்றும் யோகா செயல் விளக்க பயிற்சி நடந்தது. இதில் இயற்கை மருத்துவ முறையில் கண் மற்றும் நாசி சுத்தப்படுத்துதல் குறித்தும். யோகா மூலம் சூரிய நமஸ்காரம், பிராயாணாமம் செயல் விளக்கப் பயிற்சி வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு வாழும் கலை அமைப்பின் நிர்வாகி செந்தில் நாயகம் தலைமை வகித்தார். செந்தூர் பாண்டியன், சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோவில்பட்டி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை இயற்கை மருத்துவர் திருமுருகன் கலந்து கொண்டு இயற்கை மருத்துவம் மற்றும் யோகா பயிற்சி அளித்தார். இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். அனைவருக்கும் கண் மற்றும் மூக்கு வழி குடுவைகள் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News