நவோதயா அகாடமி பள்ளி மாணவ, மாணவியர்கள் நாமக்கல் கால்நடை ஆராய்ச்சி நிலையம் மற்றும் கால்நடை மருத்துவமனைக்கு களப்பயணம் !
நவோதயா அகாடமி சீனியர் செகண்டரி பள்ளி மாணவ, மாணவியர்கள் நாமக்கல் கால்நடை ஆராய்ச்சி நிலையம் மற்றும் கால்நடை மருத்துவமனைக்கு களப்பயணம் மேற்கொண்டனர்.
அக். 25 : நாமக்கல் கீரம்பூரில் உள்ள தி நவோதயா அகாடமி சீனியர் செகண்டரி பள்ளியில் பயிலும் ஒன்று மற்றும், இரண்டாம் வகுப்பு மாணவ, மாணவியர்கள் 25.10.2024 வெள்ளிக்கிழமையன்று காலை 9.00 மணிக்கு நாமக்கல் அணியாபுரத்தில் உள்ள கால்நடை ஆராய்ச்சி நிலையம் மற்றும் கால்நடை மருத்துவக் கல்லூரிக்கு களப்பணம் சென்று வந்தனர். குழந்தைகளுக்கு கால்நடை வளர்ப்பு, அதன் முக்கியத்துவம், கால்நடைகளுக்கு ஏற்படும் நோய்கள், அதற்கான சிகிச்சை முறைகள். முயல். பன்றி, ஆடு, மாடு, நாய், கோழி ஆகியன வளர்ப்பு முறைகள், அவற்றிற்கான உணவுமுறைகள், உணவுகளை உற்பத்தி செய்தல், அதனை பாதுகாத்தல், பதப்படுத்துதல் குறித்த விளக்கங்களை கால்நடை மருத்துவக் கல்லூரி பேராசிரியர்கள் நேரடியாக விளக்கி கூறினார்கள். விலங்குகளை கண்ட குழந்தைச் செல்வங்கள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்தனர். நல்ல அனுபவ அறிவைப் பெற்றனர். களப்பயணத்தை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்த “பள்ளியின் பொருளாளர் கா. தேனருவி அவர்கள் பேசுகையில் சிபிஎஸ்இ பள்ளியில் படிக்கும் குழந்தைச் செல்வங்கள் பன்முகத்தன்மையோடும், பல திறமைகளை உள்ளடக்கி ஆளுமைப் பண்பை பெற்றிருக்க வேண்டும் என்பதற்காவே இதுபோன்ற களஆய்வுகளை பள்ளி நிர்வாகத்தின் சார்பாக ஏற்பாடு செய்கின்றோம்,; குழந்தைகள் ஆராய்ச்சி மனப்பான்மையை வளர்த்துக்கொள்ள வேண்டும். மாறிவரும் உலகில் மனிதனுக்கு மட்டுமல்ல விலங்குகளுக்கும் ஏற்படும் புதிய புதிய நோய்களுக்கு மருத்து கண்டுபிடிக்க வேண்டும் என்ற ஆர்வத்தையும் கற்றல் அறிவைத் தூண்டுவதே இந்த களப்பயணத்தின் நோக்கமாகும் என்று கூறி வழியனுப்பி வைத்தார்.”மாலை 3.00 மணிக்கு பள்ளிக்கு திரும்பிய குழந்தைச் செல்வங்கள் அனைவரிடமும் பள்ளி முதல்வர் ஆண்டனி ராஜ் அவர்கள் கள ஆய்வின் பயன்கள், நன்மைகள் குறித்து கேட்டறிந்து அனைத்து ஆசிரியைக்ளுக்கும், பேருந்து ஒட்டுநர்கள், ஆண்டிஸ் அனைவருக்கும் நன்றி கூறினார்.