உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்து நவோதயா பள்ளி மாணவர் சாதனை | நாமக்கல் | கிங் நியூஸ் 24x7

Update: 2025-02-13 12:45 GMT
உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்து நவோதயா பள்ளி மாணவர் சாதனை | நாமக்கல் | கிங் நியூஸ் 24x7

உலக சாதனை

  • whatsapp icon

பிப்ரவரி:13 நாமக்கல் Navodaya Academy Senior Secondary பள்ளியின் U.K.G. மாணவன் ; P. சாய்ஜெத் உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்து சாதனைப் படைத்துள்ளார்,

Jackie Book of Records and Arila Art Academy இணைந்து நடத்திய பாரதியாரின் 142ஆவது பிறந்தநாள் விழா சாதனை நிகழ்ச்சியில் நமது நவோதயா பள்ளி மாணவர் P. சாய்ஜெத் (யு.கே.ஜி) கலந்துகொண்டு "நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ" என்ற பாரதியாரின் கவிதையை முழுமையாகவும், கம்பீரத்துடன் அழகாக குரல் ஏற்றத்தாழ்வுடன் சொல்லி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். அதனைப் பாராட்டி ஜாக்கி புக் ஆப் ரெக்கார்ட்ஸ் நிறுவனம் சாதனையாளருக்கான விருதினையும், சான்றிதழையும் வழங்கியுள்ளது,

இன்று பள்ளியில் நடைபெற்ற வழிபாட்டுக் கூட்டத்தில் பள்ளியின் பொருளாளர் திரு. கா தேனருவி அவர்கள் பதக்கத்தையும் சான்றிதழையும் வழங்கி மாணவரை வெகுவாகப் பராட்டினார். அவர் "பேசுகையில் பாரதியாரின் இந்த கவிதை பலருக்கும் தன்னம்பிக்கையை கற்றுத் தரும், அதனை நமது பள்ளி மாணவர் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பெறச்செய்தது தமிழுக்கும் தமிழ் இலக்கியத்திற்கும் அவர் செய்யும் தொண்டு ஆகும். இன்னும் இதுபோல பல சாதனைகளை செய்யவேண்டும் என்றும் பயிற்சி அளித்த மழலையர் பள்ளி ஆசிரியைகள், மற்றும் பெற்றோர்கள் அனைவருக்கும் வாழ்த்துகளைக் கூறி பாராட்டினார். பள்ளி முதல்வர் ஆசிரியர்கள், மாணவ, மாணவியர்கள் அனைவரும் உற்சாகப்படுத்தி பாரட்டி வாழ்த்துக் கூறினார்கள். 

Tags:    

Similar News