நவோதயாப் பள்ளி மாணவி கராத்தே போட்டியில் உலகசாதனை பிடித்து வரலாற்றுச் சாதனைப் படைத்துள்ளார்....

Navodayaa School
நவோதயாப் பள்ளி மாணவி கராத்தே போட்டியில் உலகசாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்து வரலாற்றுச் சாதனைப் படைத்துள்ளார். டிசம்பர் 17 நாமக்கல் கீரம்பூரில் உள்ள தி நவோதயா அகாடமி சீனியர் செகண்டரி பள்ளியில் 4ஆம் வகுப்பு படித்து வரும் மாணவி லக்சனா வர்ஷினி பல்வேறு இடங்களில் நடைபெற்ற கராத்தே போட்டியிலும், சிலம்பம் போட்டியிலும் உலகசாதனைப் படைத்துள்ளார். ராயல் புத்தக உலகசாதனை மற்றும் வஜ்ரம் விளையாட்டு வளர்ச்சி கூட்டமைப்பு இணைந்து கடந்த 08.09.2024 அன்று நீலகிரி மாவட்டம் குன்னுாரில் நடத்திய மாநில அளவிலான சிலம்பம் போட்டியில் "இளம் சாதனையாளர் விருது - 2024" பெற்று சாதனைப் படைத்துளார்.
ஆர்பி உலக சாதனைப் புத்தகம் நடத்திய மாநில அளவிலான கராத்தே போட்டியில் மாணவி லக்சனா வர்ஷினி கலந்து கொண்டு சாதனையாளர் விருதினைப் பெற்றுளார். சாய் சட்டோக்கான் கரேத்தே மற்றும் கொபுடோ ஆசோசியேசன் இணைந்து நடத்திய நான்காவது தேசிய அளவிலான கரோத்தே போட்டி கடந்த 01.12. 2024 அன்று சேலத்தில் நடைபெற்றது. அதில் மாணவி லக்சனா வர்ஷினி அவர்கள் கலந்து கொண்டு இரண்டாவது பரிசினைப் பெற்று சாதனைப் படைத்துளார்.
சின்டோ ஸ்போர்ட்ஸ் அகாடமி நடத்திய குழந்தைகளுக்கான மாநில அளவில் நடைபெற்ற கரேத்தே போட்டியில் மாணவி லக்சனா வர்ஷினி அவர்கள் கலந்துகொண்டு தனித்திறனை வெளிப்படுத்தியமைக்கான பாராட்டுச் சான்றிதழைப் பெற்று சாதனைப் படைத்துள்ளார். பல்வேறு போட்டிகளில் இளம் வயதில் உலக சாதனைப் படைத்த மாணவிக்கு இன்று காலை பள்ளியில் நடைபெற்ற வழிபாட்டுக் கூட்டத்தில் சான்றிதழ் மற்றும் பதங்கங்கள் வழங்கப்பட்டு பள்ளி நிர்வாகத்தினர், முதல்வர், இருபால் ஆசிரியர்கள் சக மாணவ, மாணவிகள் வெகுவாக பாராட்டி வாழ்த்தினார்கள். பள்ளி மாணவ, மாணவியருக்கு இவருடைய வெற்றி ஒரு வழிகாட்டியாகவும், தன்னம்பிகையையும் ஏற்படுத்தியது.