தோரணமலை முருகன் கோவிலில் நயினார் நாகேந்திரன் வழிபாடு

கடையம் அருகே தோரணமலை முருகன் கோவிலில் நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் வழிபாடு செய்தார்.

Update: 2024-04-12 05:17 GMT

கட்சியினருடன் நயினார் நாகேந்திரன்

தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள தோரணமலை முருகன் கோவிலுக்கு நெல்லை நாடாளுமன்ற பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகிகளுடன் வருகை தந்தார். அப்போது சித்தர்கள் வழிபாடு செய்த மலை உச்சியில் உள்ள முருகப் பெருமாளை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் 1200 படிகள் ஏறிச் சென்று முருகப் பெருமானுக்கு சிறப்பு வழிபாடுகளை நடத்தி சுவாமி தரிசனம் செய்தார். இந்த நிகழ்ச்சிகள் ஏராளமான பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் உள்ளிட்ட பாலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News