கூடுதல் ஊட்டசத்து பெற பயன்படுத்தபட்ட ஊசிகள்-போட்டியில் பங்கேற்றவர்கள் அதிர்ச்சி!
விளையாட்டு போட்டியில் பயன்படுத்தபட்ட ஊட்டசத்து ஊசிகள்
Update: 2024-02-17 11:04 GMT
கோவை நேரு விளையாட்டு அரங்கில் தமிழ்நாடு காவல்துறை சார்பில் 63-வது காவல்துறை மண்டலங்களுக்கு இடையேயான தடகளப் போட்டிகள் மூன்று நாட்களாக நடைபெற்றது.போட்டிகளின் நிறைவு நாளில் வெற்றி பெற்ற காவல் துறை அணிகளுக்கு தமிழ்நாடு காவல்துறை இயக்குனர் சங்கர் ஜிவால் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பதக்கங்களை வழங்கி பாராட்டு தெரிவித்தார். இந்தப் போட்டியில்,மேற்கு மண்டலம்,மத்திய மண்டலம்,தென் மண்டலம்,வடக்கு மண்டலம்,சென்னை பெருநகர காவல் ஆணையரகம்,ஆவடி காவல் ஆணையரகம்,தாம்பரம் காவல் ஆணையரகம்,ஆயுதப்படை,தமிழ்நாடு கமாண்டோ படைப்பிரிவு ஆகிய ஒன்பது அணிகளின் சார்பில் காவல்துறை வீரர்கள்,வீராங்கனைகள் என மொத்தம் 743 பேர் பங்கேற்றனர்.இதில் பொதுவான பிரிவு,அமைச்சுப் பணியாளர்கள் படைவீரர் காவல்துறையினர் பிரிவுகளில் வயது வாரியாக போட்டிகள் நடைபெற்றன.பொதுப்பிரிவினரில் ஆண்களுக்கு குண்டு எறிதல்,1,500 மீட்டர் தொடர் ஒட்டம்,உயரம் தாண்டுதல், தடை தாண்டுதல்,ஈட்டி எறிதல்,400 மீட்டர் ஓட்டம் உள்ளிட்ட போட்டிகளும் பெண்களுக்கு 1,500 மீட்டர் தொடர் ஓட்டம், தடை தாண்டுதல் உயரம் தாண்டுதல்,குண்டு எறிதல்,400 மீட்டர் ஓட்டம் உள்ளிட்ட போட்டிகளும் நடத்தப்பட்டன.இதேபோல் வயது பிரிவுகள் வாரியாக ஓட்டப்பந்தயப் போட்டிகளும்,குண்டு எறிதல் போட்டி அனைத்து பிரிவினருக்கும் நடத்தப்பட்டது. இந்நிலையில் காவல் துறையினருகான போட்டிகள் நடைபெற்ற நேரு விளையாட்டு அரங்கில் உள்ள ஆண்கள் கழிப்பறையில் ஏராளமான கூடுதல் ஊட்டசத்து பெற பயன்படுத்தபட்ட ஊசிகள் கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இது குறித்து போட்டியில் கலந்து கொண்ட காவலர்கள் கூறுகையில் கூடுதல் ஊட்டசத்து பயன்படுத்தி போட்டிகளில் சிலர் வெற்றி பெற்றார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாகவும் காவல்துறையில் பணியாற்றுபவர்களே இதுபோன்று ஊட்டசத்து பயன்படுத்தி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாக தெரிவித்தனர்.கடின பயிற்சி மேற்கொண்டு போட்டிகளில் பங்கேற்றதாகவும் சிலர் தவறான வழியை பயன்படுத்தி வெற்றி பெற்றுள்ளதாக தெரிவித்தனர்.இது குறித்து உயர் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு ஊட்டசத்து ஊசிகள் செலுத்தி போடியில் பங்கேற்றவர்களை கண்டறிந்து அவர்களின் பதக்கங்களை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தினர். இதுகுறித்து கோவை மாவட்ட விளையாட்டு அலுவலரை தொடர் கொண்டு கேட்டபோது போட்டிகளில் பங்கேற்கும் வீரர்கள் ஊக்க பானம் அருந்த தடை எதுவும் இல்லை எனவும் ஊசி மூலம் ஊட்டசத்து பெறுவதற்கு தடை உள்ளது என தெரிவித்தார்.மேலும் இதுகுறித்து பயிற்சியாளர்கள் வீரர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனவும் குற்றம் நிரூபிக்க பட்டால் நான்கு ஆண்டுகளுக்கு போட்டிகளில் பங்கேற்க தடை செய்ய விதிமுறைகள் உள்ளதாக தெரிவித்தார்.