உதகை அருகே பூத்துக்குலுங்கும் நீலகுறிஞ்சி
By : King 24X7 News (B)
Update: 2023-11-02 08:51 GMT
நீல குறிஞ்சி
நீலகிரி மாவட்டத்தில் ஒரு ஆண்டு முதல் 30ஆண்டு வரை பூக்கும் குறிஞ்சி மலர்கள் இருந்தாலும் 12 ஆண்டுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சி மலர் சிறப்பாக கருதப்படுகிறது.
ஒரு பகுதியில் பூக்கும் குறிஞ்சி மலர் மீண்டும் அதே இடத்தில் பூப்பதில்லை. கடந்த சில ஆண்டுகளாக நீலகிரி மாவட்டத்தில் பெரிய அளவில் குறிஞ்சி மலர்கள் பூக்கவில்லை.
இந்நிலையில் ஊட்டி அருகே தொட்டபெட்டாவில் இருந்து தும்மனட்டி செல்லும் சாலையோரங்களில் உள்ள குறிஞ்சி செடிகளில் தற்போது குறிஞ்சி மலர்கள் பூக்க துவங்கியுள்ளன. இதனை சுற்றுலா பயணிகள் பார்த்து செல்கின்றனர். ஊதா நிறத்தில் பூத்துள்ள குறிஞ்சி மலர்கள் பார்வையாளர்களை வெகுவாக ஈர்க்கின்றன.