நெல்லை மாவட்ட மழை பதிவு விவரம்

நெல்லை மாவட்டத்தில் அதிகபட்சமாக நாலு முக்கு பகுதியில் 42 மி.மீ மழை பதிவானதாக மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Update: 2024-06-28 05:33 GMT

 மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் 

திருநெல்வேலி மாவட்டத்தில் இன்று (ஜூன் 28) காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக மேற்கு தொடர்ச்சி மலை பகுதியான நாலு முக்கில் 42 மில்லி மீட்டர் அதாவது 4. 2 சென்டிமீட்டர், ஊத்து பகுதியில் 33 மில்லி மீட்டரும், காக்காச்சி பகுதிகளில் 24 மில்லி மீட்டரும், மாஞ்சோலையில் 9 மிமீ மழைப்பொழிவு பதிவாகியுள்ளது. பாபநாசம் அணை பகுதிகளில் 9 மிமீ மழைப்பொழிவு பதிவாகியுள்ளது என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.



Tags:    

Similar News