நெல்லைக்கு வயது 1254
நெல்லை நகரில் உள்ள பெருமாள் கோவிலில் கண்டெடுக்கப்பட்ட பாண்டியர் கால கல்வெட்டின் அடிப்படையில் நெல்லைக்கு 1254 வயது இருக்கலாம் என தொல்லியல் துறையினர் தெரிவிக்கின்றனர்.
Update: 2024-06-24 07:36 GMT
நெல்லை மாநகர டவுனில் உள்ள பழமை வாய்ந்த பெருமாள் கோவிலில் பாண்டியர் கால கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வரலாற்று பண்பாட்டு கள ஆய்வு மைய இயக்குனர் மாரியப்பன் தெரிவித்துள்ளார். இது 770 ஆண்டு ஆட்சி செய்த பராந்தக நெடுஞ்செழியன் காலத்து கல்வெட்டு என கூறப்படுகிறது. இதில் திருநெல்வேலி பெயர் குறிப்பிட்டுள்ளதால் இதன்படி நெல்லைக்கு வயது 1254 ஆண்டுகள் இருக்கலாம் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்றுள்ளார்.