மத்திய அமைச்சரிடம் ஆலோசனை பெற்ற நெல்லை எம்எல்ஏ
திருநெல்வேலியில் மத்திய அமைச்சரிடம் ஆலோசனை பெற்ற நெல்லை எம்எல்ஏ.
Update: 2024-03-15 06:16 GMT
திருநெல்வேலி தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் இன்று (மார்ச் 15) மத்திய அமைச்சர் எல்.முருகனை நேரில் சந்தித்தார். அப்பொழுது வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதியில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து ஆலோசனை கேட்டறிந்தார். இந்த நிகழ்வின்போது பாஜகவினர் திரளாக கலந்து கொண்டனர்.