ஆசிரியை பணியிட நீக்கத்திற்கு நெல்லை முபாரக் கண்டனம்
பொதுக்கல்வி துறையை பாதுகாக்க குரல் கொடுத்த ஆசிரியை பணியிடை நீக்கம் செய்யப்பட்டது கண்டிக்கத்தக்கது என எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் தெரிவித்துள்ளார்.
Update: 2024-03-09 02:35 GMT
தமிழகத்தில் பொது கல்வித்துறையை சீர்படுத்த வேண்டும்,அரசு பள்ளிகள், கல்லூரிகள் பாதுகாக்கப்பட வேண்டும் என கோரிக்கையை தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்ட ஆசிரியை உமா மகேஸ்வரி பணியிடை செய்யப்பட்டார். இதற்கு எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் இன்று (மார்ச் 9) வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் பொதுக்கல்வி துறையை பாதுகாக்க குரல் கொடுத்த ஆசிரியை பணியிடை நீக்கம் செய்யப்பட்டது கண்டிக்கத்தக்கது என தெரிவித்துள்ளார்.