திருவெறும்பூரில் தீயணைப்பு நிலையத்திற்கு புதிய கட்டிடம்…!

திருவெறும்பூரில் தீயணைப்பு நிலையத்திற்கு புதிய கட்டிடத்தை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்.;

Update: 2024-03-06 17:53 GMT

திருச்சி திருவெறும்பூரில் தீயணைப்பு நிலையம் பழைய வட்டாட்சியர் அலுவலகத்தில் தற்காலிகமாக இயங்கி வந்தது. திருவெறும்பூர் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் தொழிற்சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகள் அதிகம் உள்ளதால் தீயணைப்பு நிலையத்திற்கு புதிய கட்டிடம் கட்ட முடிவு செய்யப்பட்டது. அதன்படி, புதிய கட்டிடம் கட்டப்பட்டு அதற்கான திறப்பு விழா இன்று (06-03-2024)நடந்தது. இதனை, தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார்.

Advertisement

இந்த விழாவில், திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப்குமார், கிழக்கு மாநகர செயலாளர் மதிவாணன், முன்னாள் எம்எல்ஏ கே.என்.சேகரன், மத்திய மண்டல துணை இயக்குநர் க.குமார், மாவட்ட அலுவலர் ஜெகதீஷ், உதவி அலுவலர்கள் லியோ ஜோசப், ஆரோக்கியராஜ், சத்தியவர்த்தன், நிலைய அலுவலர் உதயகுமார் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

தீயணைப்பு நிலையத்தில் 17 ஊழியர்கள் பணியில் இருப்பர். இந்நிலையமானது, 24 மணி நேரமும் செயல்படும். பொதுமக்கள் அவசர தேவைக்கு 101 மற்றும் 112 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Tags:    

Similar News