அரியலூர்: 8.20 கோடி மதிப்பில் புதிய கட்டிடங்கள் திறப்பு
அரியலூர் மாவட்டத்தில் 8.20 கோடி மதிப்பில் புதிய கட்டிடங்களை காணொளி மூலம் முதலமைச்சர் திறந்து வைத்தார்.
அரியலூர் மாவட்டம், முழுவதும் பல்வேறு இடங்களில் 8.20 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கபட்ட புதிய கட்டிடங்களை காணொலி காட்சி மூலம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.
அதன்படி அர்ச்சனாபுரம், பாப்பாக்குளம், வைப்பம், வெள்ளூர், ஆதனூர் உள்ளிட்ட பகுதிகளில் தலா 28 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கபட்ட 2 வகுப்பறை கட்டிடங்களை திறந்து வைத்தார்.
இதேபோல் அரியலூர், திருமானூர், செந்துறை, ஆண்டிமடம் உள்ளிட்ட ஒன்றியங்களிலும் ஊராட்சிமன்ற அலுவலகம், அங்கன்வாடி மைய கட்டிடங்களை திறந்து வைத்தார். இதனையொட்டி வைப்பம் கிராம ஊராட்சி ஒன்றிய தொடக்கபள்ளியில் புதிதாக திறக்கபட்ட 2 வகுப்பறை கட்டிடத்தில் மாவட்ட ஆட்சியர் ஆனிமேரி ஸ்வர்ணா, அரியலூர் எம்எல்ஏ சின்னப்பா இன்று குத்து விளக்கேற்றி வைத்து கட்டிடத்தினை பார்வையிட்டனர்.
இதில் அரசுதுறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.