எஸ் பி அலுவலகத்தில் புதிய குற்றவியல் நடைமுறை சட்ட பயிற்சி வகுப்புகள்
திருவாரூர் எஸ் பி அலுவலகத்தில் புதிய குற்றவியல் நடைமுறை சட்டப் பயிற்சி வகுப்புகள் நடைபெறுகின்றன.
Update: 2024-05-18 09:30 GMT
காவல்துறை இயக்குனர் மற்றும் காவல்துறை தலைவர் மத்திய மண்டலம் ஆணையின்படி எஸ்பி ஜெயக்குமார் உத்தரவின்படி புதிய குற்றவியல் நடைமுறை சட்ட பயிற்சி வகுப்புகள் உதவி ஆய்வாளர் முதல் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் வரையிலான அதிகாரிகளுக்கு 5 நாட்கள் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டு எஸ் பி அலுவலகத்தில் நடைபெற்று வந்தது.
ஐந்து நாட்கள் பயிற்சி வகுப்பு நிறைவு நாள் எஸ் பி ஜெயக்குமார் 5 நாட்கள் நடைபெற்ற சட்ட வகுப்புகள் குறித்து அதிகாரிகளிடம் கேள்விகள் கேட்டு சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்து சட்ட வகுப்புகள் குறித்து நிறைகுறைகளை கேட்டறிந்தார்.