புதிய தலைமை ஆசிரியர் பொறுப்பேற்பு !
Update: 2024-07-24 07:10 GMT
இரகுநாதன்
இராசிபுரம் அடுத்துள்ள சந்திரசேகரபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியின் புதிய தலைமை ஆசிரியராக திரு. இரகுநாதன் அவர்கள் பொறுப்பேற்றுக் கொண்டார். இராசிபுரத்தை சொந்த ஊராகக் கொண்ட இவர் சிங்கிலியங்கோம்பை அரசு உயர்நிலைப் பள்ளியில் ஏற்கனவே தலைமை ஆசிரியராக பணியாற்றினார். தற்போது பணி மாறுதலில் சந்திரசேகரபுரம் பள்ளிக்கு மாறுதல் பெற்று தலைமை ஆசிரியராக பொறுப்பேற்றுள்ளார். புதிதாக பொறுப்பேற்ற தலைமை ஆசிரியருக்கு பள்ளியின் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பணி சிறக்க வாழ்த்து தெரிவித்தனர்.