புதிய பல்பொருள் அங்காடி திறப்பு
தென்காசி மாவட்டம்,மேலகரம் பகுதியில் நுகா்வோா் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலையின் புதிய பல்பொருள் அங்காடியை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்.;
தென்காசி மாவட்டம், மேலகரம் பேரூராட்சி பகுதியில் நுகா்வோா் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலையின் புதிய பல்பொருள் அங்காடி திறப்பு விழா நடைபெற்றது. புதிய பல்பொருள் அங்காடியை மாவட்ட ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா் திறந்து வைத்து குத்துவிளக்கேற்றினாா்.
தென்காசி மாவட்ட கூட்டுறவு நிறுவனங்கள் தயாரிக்கும் தென்றல் தேங்காய் எண்ணெய், வசந்தம் பினாயில் ஆகியவற்றின் விற்பனையை தொடங்கி வைத்து செய்தியாளா்களிடம் கூறியதாவது,
கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் 20 சதவீத தள்ளுபடிவிலையில் மருந்துகள் விற்பனை செய்யும் கூட்டுறவு மருந்து கடை ஆலங்குளம், சங்கரன்கோவில் மற்றும் தென்காசி போன்ற இடங்களில் நடத்தப்படுகிறது.
மேலகரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தை பாா்வையிட்டு 2 மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ. 5.30 லட்சம், 21உறுப்பினா்களுக்கு ரூ. 13.57 லட்சம் பயிா் கடன்கள் மற்றும் 12 உறுப்பினா்களுக்கு ரூ. 5.04 லட்சம் கால்நடை பராமரிப்பு கடன்கள் என மொத்தம் 59 உறுப்பினா்களுக்கு ரூ 24.41 லட்சம் கடன்களை ஆட்சியா் வழங்கினாா்.