முசிறியில் புதிய தமிழகம் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

தமிழகத்தில் பூரண மது விலக்கை அமல்படுத்தக்கோரி முசிறி கைகாட்டியில் புதிய தமிழகம் கட்சி சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2024-06-26 16:09 GMT

தமிழகத்தில் பூரண மது விலக்கை அமல்படுத்தக்கோரி முசிறி கைகாட்டியில் புதிய தமிழகம் கட்சி சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு, திருச்சி மேற்கு மாவட்ட செயலாளா் சின்னையன் தலைமை வகித்தாா். மாவட்ட இணைச் செயலாளா் விஜயகுமாா் முன்னிலை வகித்தாா். இந்நிகழ்வில், மாவட்ட விவசாய அணி செயலாளா் வேலுச்சாமி, முசிறி கிழக்கு ஒன்றிய செயலாளா் தமிழரசன், தொட்டியம் ஒன்றிய பொறுப்பாளா் மனோ செந்தில்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். நிறைவாக முசிறி மேற்கு ஒன்றிய செயலாளா் செந்தில்குமாா் நன்றி கூறினாா்.
Tags:    

Similar News